வட கொரியாவில் பிப்ரவரி 28, மார்ச் 2, மார்ச் 9, மார்ச் 12 என தொடர்ச்சியாக ஆயுதச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
வொன்சானா அல்லது சான்டோக் கடற்கரை நகரங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்படிருக்காலம் எனத் தெரிகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த அனைத்துச் சோதனைகளையும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையிட்டுள்ளார்.
வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு கிம் ஜாங் உன் நீண்ட காலமாகச் செல்லவில்லை என்பதையே இது உணர்த்துவதாகவும், கொரோனா வைரஸ் பீதியில் அவர் வேறெங்கோ தங்கிவருவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனா, தென் கொரியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் கோவிட்-19 வைரஸ் பரவிவரும் சூழலில், வட கொரியாவில் இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. இது அந்நாட்டின் வெளிப்படைத் தன்மையை சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க : குமரியில் 10 ரூபாய்க்கு சிக்கன் 65 - கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி!