ETV Bharat / international

தென்கொரியாவில் உயர்ந்த கரோனா பாதிப்பு... நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட அரசு! - சியோல்

சியோல்: தென்கொரியாவில் புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அந்நாட்டில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 175 ஆக உயர்ந்துள்ளது.

COVID-19 tracker  COVID-19  South Korea  Russia-flagged cargo ship  தென்கொரியா  தென்கொரியா கரோனா தொற்று
தென்கொரியாவில் உயர்ந்த கரோனா பாதிப்பு... நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட அரசு
author img

By

Published : Jul 27, 2020, 12:24 PM IST

உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 64 லட்சத்து 12 ஆயிரத்து 794 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, இந்த வைரஸ் தொற்றுக்கு 6 லட்சத்து 52 ஆயிரத்து 39 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு கோடியே 42 ஆயிரத்து 362 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தென்கொரியாவில், புதியதாக 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டில் வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை இதன் மூலம் 14 ஆயிரத்து 175 ஆக உயர்ந்துள்ளது. தென்கொரியாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் திங்களன்று(ஜூலை.27), வெளிநாட்டிலிருந்து தென்கொரியாவிற்கு வந்த 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக கூறியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகப்படியான தொற்று தென்கொரியாவில் பதிவானது. அதில், பெரும்பாலானோர் ஈராக்கிலிருந்து திரும்பிய கட்டுமானத் தொழிலாளர்கள், பூசான் தெற்குத் துறைமுகத்திலுள்ள சரக்கு கப்பல் பணியாளர்களே. இந்தச்சூழ்நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளை அந்நாட்டு அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவை உளவு பார்க்கச் சென்ற சீன விஞ்ஞானிகள் விசா மோசடி வழக்கில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.