2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தில் இலங்கையிலுள்ள தேவாலயங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றிருந்தனர். இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விசாரணையை துரிதப்படுத்த அரசு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு பாதுகாப்புத் துறை மேஜர் ஜெனரல் குணரத்ன அளித்துள்ள அறிக்கையில், “கொழும்பு, நெகம்போ, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடந்த தாக்குதல்கள் குறித்து விரைவான விசாரணையை உறுதிசெய்ய அதிபர் கோத்தபய ராஜபக்சவின் உத்தரவைத் தொடர்ந்து பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் குறித்த சிஐடி விசாரணை கடந்த ஆட்சியின்போது திறம்பட நடத்தப்படவில்லை. முறையான விசாரணையை நடத்தத் தவறினால், இறந்த அந்த அப்பாவி மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. தற்போது விசாரணை துரிதப்படுத்தப்படும்.
பயங்கரவாதம், பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அரசு அமைத்துள்ள குழுவில் நான்கு பேர் உள்ளனர்.
இதையும் படிங்க: சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து: மகிந்த ராஜபக்ச மகன் மன்னிப்பு