இலங்கையில் நேற்று எட்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டு வெடிப்பில் இதுவரை 300 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், கொழும்பு விமான நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மற்றொரு வெடிகுண்டு இன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழப்பு செய்யப்பட்டது. இதனால் இலங்கை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில், தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என அந்நாட்டு அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். மேலும், நாளை தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என கூறிய அவர், இந்த தாக்குதலுக்கு உள்ளூர் அமைப்பே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.