ETV Bharat / international

இலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கையில் மாற்றம் - sri lanka

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

srilanka
author img

By

Published : Apr 26, 2019, 11:00 AM IST

இலங்கையில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு உலகம் முழுவதையும் உலுக்கியுள்ளது. மேலும், அந்நாட்டில் ஆங்காங்கே தொடர்ந்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுவருவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலில் 359 பேர் பலியாகியுள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொடர் குண்டு வெடிப்பில் இதுவரை 253 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அலுவலர் அனில் ஜாங்சே கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரிழந்தோரின் சடலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் துல்லியமாக கணக்கிட முடியவில்லை. தற்போது உண்மையான நிலவரம் தெரிய வந்துள்ளது. அதன்படி அடுத்தடுத்து பல இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் மொத்தம் 253 பேர் உயிரிழந்துள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

Intro:Body:

*வெடிகுண்டு தாக்குதல் : பலி எண்ணிக்கையில் மாற்றம் - 253 பேர் உயிரிழப்பு.*

*இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிர் இழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.*

*இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரி அனில் ஜாங்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் உயிரிழந்தோரின் சடலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால்  துல்லியமாக கணக்கிட முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.  தற்போது  உண்மையான நிலவரம் தெரிய வந்துள்ளதாகவும் அதன்படி அடுத்தடுத்து பல இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் மொத்தம் 253 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே 359 பேர் உயிரிழந்ததாக கூறிய நிலையில் தற்போது 253 பேர் மட்டுமே பலியானதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.*

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.