இதுகுறித்து மக்களிடையே உரையாற்றிய சிங்கப்பூர் பிரதமர் லீ செயின் லூங், "அடுத்த ஏப்ரல் மாதத்துக்குள் கரோனா பெருந்தொற்று ஒழிக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆகையால் முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவெடுத்துள்ளோம். இதற்காக நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்" என்றார்.
சிங்கப்பூரில் கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில நாள்களுக்கு முன்பு தளர்த்தப்பட்ட சூழலில், சிங்கப்பூர் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இதுவரை 42 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 26 உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சீன ஊடகங்களுக்கு கிடுக்குப்பிடி போட்ட அமெரிக்கா!