காந்தஹார்: ஒரே இரவில் காந்தஹார் விமான நிலையத்தின் மீது அதிகமான ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது. இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. தலிபான்கள் பொதுமக்கள் மீதும், ஆப்கன் பாதுகாப்புப் படை மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கியதால், கடந்த சில வாரங்களாக ஆப்கன் கலவர பூமியாக மாறியிருக்கிறது.
வெளிநாட்டு ராணுவத்தினர் ஆப்கனை விட்டு வெளியேறுவதைத் தொடர்ந்து, வன்முறை வெறியாட்டங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளன. பெருநாள் தொழுகையின் போது அதிபர் மாளிகை அருகே 3 ஏவுகணை தாக்குதல் நடந்தது. தக்கார் உள்ளிட்ட ஆப்கனின் பல்வேறு மாவட்டங்கள் தலிபான்களால் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
ஆப்கன் வெளியுறவுத் துறை அமைச்சகம் அளித்துள்ள தகவலில், தலிபான்கள் இதுவரை 193 மாவட்டங்களின் மையப் பகுதியையும், 19 எல்லை மாவட்டங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
தலிபான்களால் இதுவரை 2000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 1,600 பேர் கடத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் தொடர் மழை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு