ஆஸ்திரேலியாவில் மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஆளும் சுதந்திரா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றிப்பெற்றது. இது அக்கட்சிக்கு கிடைத்த தொடர் 3வது வெற்றியாகும். இதையடுத்து, சுதந்திரா கட்சி தலைவராக ஸ்கோட் மோரிசன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் தலைநகர் கேன்பெராவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அந்நாட்டு ஆளுநர் செனரல் சர் பிட்டர் கேஸ்குருவ் முன்னிலையில், ஸ்காட் மோரிசன், மீண்டும் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இத்துடன் அந்நாட்டு துணை பிரதமராக மைக்கேல் மெக்கார்மேக்கும் பதவியேற்றார்.
மேலும், 7 பெண் அமைச்சர்கள் உட்பட, புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஆஸ்திரேலிய அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக அளவு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக பழங்குடியினத்தை சேர்ந்த கென் வியாத் என்பவர் அந்நாட்டு உள்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.