மியான்மரில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு ஓராண்டுக்கு அவசரநிலையை அந்நாட்டு ராணுவம் பிரகடனப்படுத்தியுள்ளது. மியான்மர் தலைவரும், அந்நாட்டு அரசின் அலோசகருமான ஆங்க் சான் சூகி ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அரசுக்கு எதிராக ராணுவத்தினர் மேற்கொண்ட இந்தத் திடீர் நடவடிக்கையில் ஆங் சான் சூயியின் ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில் அங்கு ராணுவம் மேற்கொண்ட இந்தத் திடீர் நடவடிக்கையால் பதற்றம் நிலவுகிறது. மேலும், தலைவர்களுக்கான தகவல் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. அவசரநிலை அறிவிப்பையடுத்து அந்நாட்டின் ஆட்சி அதிகாரம் ஓராண்டு ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் என ராணுவம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நேபாளம்: தீராத நெருக்கடியில் உள்ள நாடு