இந்தியாவில் கரோனா தீவிரம் அதிகரிக்க மத விழாக்களும், அரசியல் கூட்டங்களுமே காரணம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவில் உருமாறிய கரோனா பரவுவதாக 2020 அக்டோபர் மாதம் கண்டறியப்பட்டது. கரோனா நோயாளிகள் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இந்த உருமாறிய கரோனா முக்கிய காரணமாக உள்ளது.
இந்தியாவில் நடத்தப்பட்ட மத விழாக்கள், அரசியல் கூட்டங்களால் மக்கள் கரோனா சூழலை மறந்து செயல்படத் தொடங்கினர். இவை கரோனா தீவிரமடைய வழிவகுத்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு அலுவலர் மரியா வேன் கெர்கோவ், இந்தியா மற்றும் பிற நாடுகளில் இந்த வைரஸ் பரவல் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் இதுகுறித்த முழுமையாக அறிந்துகொண்டு செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.