இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள முக்கிய தீவான இந்தோனேசியாவில் கடும் மழைக் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு சுமத்தரா பிராந்தியத்தின் தலைநகரான மேடனில் கடும் வெள்ளம் காரணமாக நகரே நீரில் மூழ்கியுள்ளது.
அங்கு வசிக்கும் சுமார் 20 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்துவரும் நிலையில், பிராந்திய பேரிடர் மேலாண்மைபடை மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
பல்வேறு பகுதிகளில் 16 அடி உயரத்திற்கு வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை இருவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, 10க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகத் தெரிவித்துள்ளது.
தொலைந்தவர்களை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ள அரசு, வெள்ளநீர் வடிந்ததும் புணரமைப்பு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என மக்களிடம் உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: ஒட்டிப் பிறந்த இரட்டைக் குரங்குகள்!