கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பு குறித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையே கடந்த பிப்ரவரி மாதம், இரண்டாம் உச்சிமாநாடு நடைபெற்றது. ஆனால், எதிர்பாராதவிதமாத இந்த பேச்சுவார்த்தை தேல்வியில் முடிந்தது.
இந்நிலையில், இப்பிரச்னை குறித்து தீர்வு காண ரஷ்யா பக்கம் பார்வையை திருப்பியுள்ளது வடகொரியா. அதன் விளைவாக, ரஷ்யா-வடகொரியா இடையே உச்சி மாநாட்டிற்கு முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் (Vladivostok) நகரில் அமைந்துள்ள தீவு ஒன்றில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அணு ஆயுதம், பொருளாதாரத் தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.