ETV Bharat / international

ரஷ்யாவில் முடிவுக்கு வரும் ஊரடங்கு!

மாஸ்கோ: ரஷ்யாவில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கப்படும் என்று அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : May 12, 2020, 2:44 PM IST

Putin
Putin

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அறிவித்துள்ளன. அதேபோல் ரஷ்யாவிலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பகுதி ஊரடங்கை மார்ச் இறுதி வாரத்தில் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்திருந்தார்.

சுமார் ஆறு வாரங்கள் அமல்படுத்தப்பட்ட இந்தப் பகுதி ஊரடங்கு தற்போது முடிவுக்கு வருவதாக புடின் அறிவித்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சியில் பேசிய அவர், "நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இருப்பினும் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கப்படும்.

செவ்வாய்க்கிழமை எந்தெந்த தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கலாம் என்பதை அந்தந்த மாகாண ஆளுநர்கள் முடிவு செய்துகொள்ளலாம். நாட்டிலுள்ள மக்களின் வேலைகள் தக்கவைக்கப்பட வேண்டும், பொருளாதாரம் மீட்கப்பட வேண்டும்.

ஆனால் அதே நேரம் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் சுகாதார விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மீண்டும் கரோனா பரவுவதைத் தடுக்க படிப்படியாகக் கட்டுப்பாடுகள் நீக்க வேண்டும்" என்றார்.

மேலும், ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தொழிற்சாலைகளையும் கட்டுமான பணிகளையும் மீண்டும் தொடங்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். உணவுப் பொருள்களை விற்காத கடைகள், முடி திருத்தும் கடைகள், கார் விற்பனை கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கின்றன.

ரஷ்யாவில் மார்ச் இறுதி வாரத்தில் பகுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் முக்கிய தொழிற்சாலைகளும் வேறு சில முக்கிய துறைகளும் மட்டும் தொடர்ந்து செயல்பட அனுமதி தரப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் மருந்தகங்களுக்கும் மருத்துவமனைகளுக்குச் செல்லவும் மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: செய்தியாளருடன் வாக்குவாதம்; இடையிலேயே கிளம்பிய டிரம்ப்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.