கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல நாடுகளில் கணக்கிட முடியாத அளவிற்கு கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் தெற்கு சிந்து மாகாணத்தின் அமைச்சர் குலாம் முர்தாசா பலூச் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்பில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுமட்டுமின்றி சிந்து மாகாணத்தின் ஆளுநர், பல சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.