கரோனா வைரஸை எதிர்த்து சார்க் நாடுகள் போராடுவதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து சார்க் அமைப்பு நாடுகளுக்கு இடையே ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கவுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், ''சார்க் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பதிலாக சுகாதாரத்துறை அமைச்சகர் ஃசாபர் மிர்சா மற்றும் மூத்த அலுவலர்கள் கலந்துகொள்வார்கள். இந்தக் கூட்டத்தில் சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர் ஈசாலா ருவான் வீரகோன் கலந்துகொள்ளவுள்ளார்.
அப்போது, கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தீவிரமான ஒத்துழைப்பை வழங்குவது, நோய் கண்காணிப்பை வலுப்படுத்துவது, தேசிய திறன்களை உருவாக்குவது, சிறந்த மருத்துவ பயிற்சிகளை பகிர்வது, ஆராய்ச்சிகளை ஒருங்கிணைப்பது ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளன.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு மக்கள்தொகையை தெற்காசிய நாடுகள் வைத்துள்ளன. இதனால் கரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதனால் பிராந்திய நாடுகள் அனைவரும் அதிகமான ஒத்துழைப்பை வழங்கினால் தான் நோய் தொற்றை எதிர்த்து போராட முடியும்" என்றார்.
ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சார்க் அமைப்பில் உள்ள அனைத்து நாட்டு தலைவர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து கரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்காக அவசர கால நிதியாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை மோடி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அறிகுறியின்றி பரவும் கரோனா - சீனாவுக்கு புதிய தலைவலி!