கரோனா வைரஸ் சீனாவில் பல்வேறு பகுதிகளில் கடுமையாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று காரணமாக சீனாவின் முக்கிய நகரான வுஹான் முற்றிலுமாக முடக்கப்பட்டு, மக்கள் தீவிரக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவைத்தாண்டி கனடா, பிலிப்பைன்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளும் சீனாவிலிருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சீனாவில் இந்த வைரஸால் பாதிக்கப்படாத தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் சிறப்பு விமானங்களை அனுப்பின.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸ் நாட்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் கரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட வுஹான் நகரைச் சேர்ந்தவர் என்றும் பிலிப்பைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் - பலி எண்ணிக்கை 304ஆக உயர்வு!