ETV Bharat / international

ஆஸ்திரேலியா, பிரேஸர் தீவில் பற்றி எரியும் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகள் உயிருக்கு அச்சுறுத்தல்!

காட்டுத் தீ வேகமெடுக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவின் பிரபல சுற்றுலாதலமான பிரேஸர் தீவிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என குயின்ஸ்லாந்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

People urged to leave Australia's Fraser Island Fraser Island Fraser Island wildfire wildfire in Fraser Island People urged to leave Fraser Island evacuation orders for Fraser Island residents evacuation Bureau of Meteorology The Marie Bashir Australian bushfires Australian wildfires ஆஸ்திரேலியா பிரேஸர் தீவில் பற்றி எரியும் காட்டுத்தீ காட்டுத்தீ பிரேஸர் சுற்றுலாப் பயணிகள் குயின்ஸ்லாந்து

author img

By

Published : Dec 7, 2020, 3:53 PM IST

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் பிரேஸர் தீவில் கொளுந்து விட்டெரியும் காட்டுத் தீயை அணைக்கும் முறையில் குயின்ஸ்லாந்து மாநில நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது. இந்தக் காட்டுத் தீயால் பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுலாவாசிகளின் சொர்க்கப்புரியாக பிரேஸர் தீவு விளங்குகிறது. இங்குள்ள அழகிய இடங்களை, இன்ப பள்ளத்தாக்குகள் என்றும் கூறுவார்கள். இந்தப் பகுதியில் ஒரு இடத்தில் பற்றிய காட்டுத் தீ தற்போது கொளுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது.

இதனால், குடியிருப்புவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு நகரும்படி குயின்ஸ்லாந்து மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இங்குள்ள பள்ளத்தாக்குகளில் கடந்த வாரம் மனிதத் தவறு காரணமாக தீப்பற்றியுள்ளது. தற்போது இந்தத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

எனினும் தீயை அணைக்க சில நாள்கள் பிடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மாநில நிர்வாகிகள் கூறுகையில், “காட்டுத் தீ மிக மோசமாக உள்ளது. பொதுமக்கள், சுற்றுலாவாசிகள் பாதுகாப்பான இடத்துக்கு நகர்ந்துவிடுங்கள். இந்தத் தீ சுற்றுச்சூழலுக்கும் காட்டில் வாழும் வனவிலங்குகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல். இதுவரை 30 லட்சம் உயிரினங்கள் வரை உயிரிழந்து இருக்கலாம்” என்றனர்.

ஆஸ்திரேலியா, பிரேஸர் தீவில் பற்றி எரியும் காட்டுத்தீ

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் 40 டிகிரி செல்சியஸ் வரை தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்துவருகிறது. இந்த வானிலை தொடர்ந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: கலிபோர்னியாவில் தொடரும் காட்டுத்தீ: மக்கள் வெளியேற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.