ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமானநிலையத்தின் வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு குறித்து தகவல் ஏதும் சரியாகத் தெரியவில்லை, கூடுதல் தகவல்களை விரைவில் தருகிறோம் என பெண்டகன் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
இது மனித வெடிகுண்டு தாக்குதல் எனவும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இது குறித்த தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்கனை தாலிபான் கைப்பற்றியநிலையில், அங்கிருந்து வெளியேறும் முயற்சியில் ஆயிரக்கணக்கானோர் காபூல் சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். இந்தப் பின்னணியில்தான் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையும் படிங்க: ’காபூல் விமான நிலையத்திற்கு செல்லாதீர்கள்’ - பிரிட்டன் எச்சரிக்கை