ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரிலிருந்து அந்நாட்டு தலைநகர் காபூல் நோக்கி அரியானா அஃப்கான் ஏர்லைன்ஸை சேர்ந்த பயணிகள் விமானம் இன்று பயணித்துள்ளது.
இந்நிலையில், காஸ்னி மாகாணத்தில் தலிபான்களின் கட்டுபாட்டில் உள்ள தெஹ் யாக் நகர் வழியாக சென்ற இவ்விமானம் திடீரென அதன் கட்டுபாட்டை இழுந்து தரையில் விழுத்து விபத்துக்குள்ளானது.
"விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை" என காஸ்னி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியானா அஃப்கான் ஏர்லைன்ஸ், பழைய விமானங்களை இயக்கி வருவதாகவும், இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் விமர்சனங்கள் உள்ளன.
இதையும் படிங்க : மன்னிக்க முடியாத தவறு': உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!