ETV Bharat / international

பப்பூவா நியூ கினியாவில் அரசியல் நெருக்கடி: பதவியை ராஜினாமா செய்த பிரதமர்! - formally

போர்ட் மோரெஸ்பி: பப்பூவா நியூ கினியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக அரசியல நெருக்கடி நீடித்துவந்த நிலையில், தனது பதவியை அந்நாட்டு பிரதமர் பீட்டர் ஓ நீல் முறைப்படி ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர்
author img

By

Published : May 29, 2019, 10:19 AM IST

தென்மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் தீவுகளை உள்ளடக்கிய நாடாக பப்பூவா நியூ கினியா இருந்துவருகிறது. இங்கு, 2011ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்துவரும் பீட்டர் ஓ நீல் இயற்கை எரிவாயு திட்டத்தில் பல்வேறு முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதன் காரணமாக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதற்கிடையே, பிரதமர் பீட்டர் ஓ நீல் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரபட்டது.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடையும் சூழல் உருவாகியுள்ளதால், தனது பதவியை ராஜினாமா செய்வதாக பீட்டர் ஓ நீல் அறிவித்துள்ளார்.

வரும் நாட்களில், அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.