ETV Bharat / international

புயல் வேகத்தில் கரோனா: அதிர்ச்சியில் அரசு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சுமார் 79 விழுக்காட்டினருக்கு உள்ளூர் பரவல் காரணமாக கோவிட்-19 தொற்று பரவியுள்ளதாக அந்நாட்டின் தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

Pakistan
Pakistan
author img

By

Published : Apr 24, 2020, 3:44 PM IST

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 642 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,155ஆக அந்த நாட்டில் உயர்ந்துள்ளது. இத்தகவலைப் பாகிஸ்தான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

மேலும், வைரஸ் தொற்று காரணமாக வியாழக்கிழமை மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் கோவிட்-19 தொற்றால் பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 237ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை 2,527 பேர் சிகிச்சை நிறைவடைந்து பூரண குணமடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 4,767 பேருக்கும், சிந்து மாகாணத்தில் 3,671 பேருக்கும், கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் 1,541 பேருக்கும், பலூசிஸ்தான் மாகாணத்தில் 607 பேருக்கும், கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தில் 300 பேருக்கும், இஸ்லாமாபாத் மாகாணத்தில் 214 பேருக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 55 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 6,839 பேருக்கு உட்பட 13,365 மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் சுமார் 79 விழுக்காட்டினருக்கு உள்ளூர் பரவல் காரணமாக கோவிட்-19 தொற்று பரவியுள்ளதாக அந்நாட்டின் தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது. நாட்டில் வைரஸ் பரவலின் தீவிரமின்மையைக் கண்டறிய நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரிடம் பரிசோதனை செய்யும் பணி அடுத்த சில நாள்களில் தொடங்கப்படும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் நாட்டின் தேசிய சுகாதார நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் அமர் இக்ரம் கூறுகையில், "உள்ளூர் பரவல், நிலைமையை முற்றிலும் மாற்றியுள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் இது மாற்றியுள்ளது.

முன்பு வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கும் மட்டுமே வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது வைரஸ் பரவல் உறுதி செய்யப்படும் நபர்கள் பெரும்பாலும் உள்ளூர் பரவல் காரணமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: சீனாவில் வெகுவாகக் குறைந்துவரும் வைரஸ் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.