உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41இல் இருந்து 94ஆக உயர்ந்துள்ளது.
சிந்துவில் முன்னதாக 41 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 53 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. இவர்கள் அனைவரும் ஈரானின் எல்லையில் உள்ள தஃப்தானில் இருந்து சிந்துவுக்கு மாற்றப்பட்டவர்கள்.
மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக அப்பகுதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழக விடுதியிலுள்ள மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு கமிட்டி கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இதையும் படிங்க: கொரோனா முன்னெச்சரிக்கை : கேரளா வாகனங்கள் சோதனைக்கு ஒத்துழைப்பதில்லையா?