2001-2008 காலகட்டத்தில் பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப், சர்வாதிகார நோக்கோடு 2007ஆம் ஆண்டு அந்நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி அதிகார அத்துமீறலில் ஈடுபட்டார்.
இதையடுத்து, முஷாரஃப் மீது 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேசத்துரோக வழக்கு பாய்ந்தது. தொடர்ந்து அந்நாட்டு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்பேரில், அதே ஆண்டு டிசம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் விசாரணை தொடங்கியது.
இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்தது.
ஆனால், 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானை விட்டு தப்பியோடிய முஷாரஃப் உடல்நலக்கோளாறு துபாயில் சிகிச்சைப் பெற்றுவருவதால், அவருக்கு தண்டனை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனினும், முஷாரஃபுக்கு மரண தண்டனை வழங்குவதில் உறுதியாக உள்ள சிறப்பு நீதிமன்றம், 163 பக்கங்கள் தீர்ப்பில், "ஒருவேளை மரண தண்டனை வழங்குவதற்கு முன்பாக முஷாரஃப் உயிரிழக்க நேர்ந்தால், அவரது உடல் இஸ்லாமாபாத்துக்கு கொண்டுவந்து பொதுவெளியில் மூன்று நாள்கள் தூக்கில் தொங்கவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க : வரலாற்றில் முதன்முறை... அமெரிக்காவின் மேயரான ஏழு மாதக் குழந்தை!