ETV Bharat / international

சர்வதேச தடையிலிருந்து தப்பிக்க பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பாகிஸ்தான்! - பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கை

இஸ்லாமாபாத்: சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும் வகையில் பாகிஸ்தான் 88 பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

Pakistan sanctions 88 terrorists
Pakistan sanctions 88 terrorists
author img

By

Published : Aug 22, 2020, 5:04 PM IST

சர்வதேச அளவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதைத் தடுக்க ஜி-7 நாடுகளால் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு (FATF) உருவாக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியை பாகிஸ்தான் தடுக்கத் தவறியதாக குற்றஞ்சாட்டி, கடந்தாண்டு ஜூன் மாதம் அந்நாட்டை 'க்ரே' (Grey) பட்டியலில், சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு சேர்த்தது.

மேலும், பயங்கரவாதிகளுக்குப் பணம் செல்வதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் பாகிஸ்தான் தடை செய்யப்பட்ட நாடுகள் பட்டியலில் (கறுப்புப் பட்டியல்) சேர்க்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுப்பட்டிருந்தது.

முன்னதாக, பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு எடுக்கவேண்டி 27 நடவடிக்கைகளை சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு பட்டியிட்டிருந்தது. ஆனால், அவற்றில் 14ஐ மட்டுமே பாகிஸ்தான் அமல்படுத்தியிருந்தது. பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வதைத் தடுக்கும் மற்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்கவில்லை.

மற்ற நடவடிக்கைகளை 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் செயல்படுத்தவில்லை என்றால், அந்நாடு கறுப்பு பட்டியலுக்கு மாற்றப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கரோனா பரவல் காரணமாக காலக்கெடு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் அல்-கொய்தா, தலிபான் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 88 பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கரவாதிகளின் வங்கி கணக்குகளையும் சொத்துக்களையும் அரசு கைப்பற்றியுள்ளது. அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பின் நடவடிக்கைக்கு பயந்து பாகிஸ்தான் தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஈரான், வடகொரியா ஆகிய நாடுகள் இந்த அமைப்பால் தடை செய்யப்பட்டன.

கறுப்புப் பட்டியலிக்கு மாற்றப்படும் நாடுகளால் உலக வங்கி, சர்வதேச நிதியம் (international monetary fund) உள்ளிட்ட மேம்பாட்டு வங்கிகளிடமிருந்து எந்தவித நிதியுதவியும் பெற முடியாது.

இதையும் படிங்க: ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுக்கப்படவில்லை - மருத்துவர்கள் மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.