இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்): குடியரசு தலைவர் மாளிகை நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற தன்னை உடல் ரீதியில் சீண்டியதாக மரியா இக்பால் தரனா என்ற சமூக செயற்பாட்டாளர், மூத்த அரசாங்க அலுவலர் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
கல்வித்துறையில் பணிபுரியும் மரியா இக்பால் தரனா, ஆம் தலீம் என்ற அமைப்பின் நிறுவனராக இருக்கிறார். இந்த குற்றச்சாட்டை, இவர் தலைமை நெறிமுறை அலுவலர் அஃபாக் அகமது மீது வைத்துள்ளார்.
அமெரிக்காவை வெளியேற்ற தாலிபானோடு அல்கொய்தா கூட்டு - புவிசார் அரசியல் போர்
“இந்த சங்கட நிகழ்வினால் நான் அங்கிருந்து சென்று விட்டேன். ஆனால் குற்றம் செய்தவர் எந்த வரைமுறையும் இன்றி தண்டிக்கப்படவேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தரனா பதிவிட்டுள்ளார்.