ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த அரசியலமைப்புப் பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ரத்து செய்தது. தொடர்ந்து, அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வர்த்தக, தூதரக உறவுகளை முறித்துக்கொண்டது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை சர்வதேச விதிகளுக்கு முரணானது என இந்தியா தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த மாதம் 21ஆம் தேதி சாடியிருந்தார்.
இந்நிலையில், இந்தியாவுடனான அஞ்சல் சேவை மீண்டும் தொடங்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஆனால், பார்சல் சேவைகள் மீதான தடை இன்னும் நீக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதையும் படிங்க : லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரிஃப்