உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவிவருகிறது. தற்போதுவரை பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்தை எட்டியுள்ளது.
தேசிய சுகாதார சேவை அமைச்சகத்தின் தகவல்களின்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 964 பேருக்கு புதியதாக கரோனா உறுதிசெய்யப்பட்டது.
கரோனாவால் 60 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,543 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உ.பி.யில் புதைக்குழியில் புதைந்து 4 சிறுவர்கள் உயிரிழப்பு!