சகிப்புத்தன்மை, ஜனநாயகம், அதிகாரப்பரவல் என்ற புதிய பாதையில் தனது பயணத்தை பாகிஸ்தான் தொடங்க வேண்டும் என அந்நாட்டுக்கான முன்னாள் சர்வதேச தூதர் ஹூசேன் ஹக்கானி தெரிவித்துள்ளார். உலகளவில் பொது வன்முறை அதிகம் பாதித்த இடங்களிலிருந்துவந்த பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தரங்கு கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஹூசேன், தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாத வன்முறைகளும், மனித உரிமை மீறலும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த பலுசிஸ்தான், சிந்த், பஸ்துன், சிராக்கி ஆகிய சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் பேசிய அவர், கரோனா பாதிப்பு உலகளவிலான சமூக அமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவிட்-19க்கு பிந்தைய உலகில் பாகிஸ்தானில் குழப்பம் தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கவலைத் தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் பாகிஸ்தான் இதுவரை கடைபிடித்துவந்த தவறான கொள்கைகளை கைவிட்டு ஜனநாயகத்தை நோக்கி நகர்வதே அந்நாட்டின் மக்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆப்கானில் அதிகரிக்கும் பொதுமக்கள் மீதான வன்முறை - ஐ.நா கவலை