ETV Bharat / international

ஷெரீப்புக்கு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்திய உயர் நீதிமன்றம்! - ஷெரீப்புக்கு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்திய உயர் நீதிமன்றம்

இஸ்லாமாபாத்: ஷெரீப் வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசு வதித்த கட்டுப்பாடுகளை லாகூர் உயர் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

Nawaz
author img

By

Published : Nov 16, 2019, 11:26 PM IST

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ரத்த தட்டணுக்கள் குறைபாடு உள்ளது. இதனால் அவர் கடந்த மாதம் (அக்டோபர்) 22ஆம் தேதி, லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்துவருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரது குடும்ப மருத்துவர்களும் இத்தகவலை தெரிவித்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஜாவேத் அப்பாஸி இதுகுறித்து மேலவையில் கேள்வி எழுப்பினார்.

அவர் தனது அறிக்கையில், ‘பிரதமர் பதவியை மூன்று முறை வகித்த ஒரே நபர் ஷெரீப். அவரது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதால் அவரை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புமாறு பஞ்சாப் அரசின் மருத்துவ வாரியம் பரிந்துரை செய்துள்ளது’ என குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, மருத்துவ சிகிச்சைக்காக ஷெரீப் வெளிநாட்டிற்குச் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியது. ஆனால், குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் அரசு விதித்திருந்தது.

இதை எதிர்த்து லாகூர் உயர் நீதிமன்றத்தில் ஷெரீப் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்தி ஷெரீப் வெளிநாடு செல்ல லாகூர் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: அப்பாவின் ஆசி வேண்டி மருத்துவமனையில் திருமணம் செய்த இளம் ஜோடி !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.