சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு வேகமாகப் பரவிவருகிறது.
இதனை எதிர்கொள்ள உலக நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வரும் சமயத்தில், பாகிஸ்தானில் முதன்முறையாக இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சருக்கான உதவியாளர் மருத்துவர் ஜஃபர் மிர்ஸா கூறுகையில், "இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தற்போதைய நிலையில் அவர்களின் உடல் சீரான நிலையில் உள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும் சமீபத்தில் ஈரானுக்கு சென்று நாடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் 15 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனை உதவி எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.
மக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம். நிலைமை கட்டுக்குள் உள்ளது" எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் அண்டை நாடான ஈரானில் இதுவரை 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இ
தையும் படிங்க : 'கொரியா, இத்தாலி, ஈரான் நாடுகளுக்குப் பயணிக்க வேண்டாம்' - அரசு அறிவுறுத்த
ல்