தெற்கு ஆசிய பிராந்தியத்தின் முக்கிய பிரச்னையாக பயங்கரவாதம் இருந்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தாலாக விளங்கும் பல பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை முன்னாள் அரசுகள் முறையாக கையாளவில்லை என வருத்தம் தெரிவித்த அவர், இந்த அலட்சியத்தால் அந்நாட்டின் பொருளாதாரம் கணிசமான இழப்புக்களை சந்தித்து வருவதாகவும் கூறினார்.
மேலும், பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் இருப்பதை ஒப்புக்கொள்ளும் வகையில், பயங்கரவாதத்தை ஒழிக்க பல கட்ட நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழிக்க தக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன் வரும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் ஆசிப் காபூரின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.