பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த 15ஆம் தேதி, எதி அறக்கட்டளையின் தலைவர் ஃபைசல் எதியைச் சந்தித்து அவர் அளித்த 100 கோடி ரூபாய் உதவித் தொகையைப் பெற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, சில நாள்கள் கழித்து ஃபைசல் எதிக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிரதமர் இம்ரானுக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பாகிஸ்தானின் சவுகத் கானும் நினைவு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்கள் பிரதமரிடம் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்தப் பரிசோதனையின் முடிவுகள் இன்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இம்ரான் கானின் குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் யாருக்கும் நோய்ப் பாதிப்பை இல்லை என தெரியவந்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல் துறை ஆலோசகர் ஃபிர்தௌஸ் ஆஷிக் அவான் தெரிவித்தார்.
இதையும் படிங்க : இந்திய ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது ஓயோ? சம்பளத்திலிருந்து 25 விழுக்காடு கட்!