பாகிஸ்தான் பிரதமராக கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெஹ்ரிக் இ இன்சஃப் கட்சி தலைவருமான இம்ரான் கான் பதவியேற்று கொண்டார். இதனையடுத்து பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமிரகம், சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுடன் இம்ரான் கான் ஒப்பந்தம் மேற்கொண்டார்.
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கு அரசு முறை பயணத்தை நாளை முதல் 22 ஆம் தேதி வரை இம்ரான்கான் மேற்கொள்ள உள்ளார். பாகிஸ்தான் பிரதமரான பிறகு, ஈரானுக்கு முதல் முறையாக செல்லும் இம்ரான்கான், அந்நாட்டு தலைவர் சயீத் அலி சந்தித்து பேச உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, இரு நாட்டு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தையை அந்நாட்டு அதிபர் ஹாசன் ரவ்ஹானிடம் இம்ரான்கான் நடத்துவார் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக இரு நாட்டு தொழிலதிபர்களை இம்ரான்கான் சந்தித்து பேசு உள்ளார்.
ஈரான் மீது அமெரிக்க விடுத்துள்ள பொருளாதார தடைகளால் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், இம்ரான்கானின் சுற்றுப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.