பாகிஸ்தானிலிருந்து தேஷ், அல்கொய்தா, ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-உத்-தவா, ஹக்கானி நெட்வொர்க் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டுவருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், பயங்கரவாத இயக்கங்கள் நிதி உதவி பெறுவதை தடுக்க பாகிஸ்தான் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆசிய பசிபிக் குழுவின் நிதி கண்காணிப்பு நடவடிக்கை பணிக்குழு (inancial action task force) ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தது.
இது குறித்த ஆய்வுக் கூட்டம் பாரிசில் இன்று நடந்தது. அப்போது, பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க பாகிஸ்தான் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சர்வதேச நாடுகள் அதிருப்தி தெரிவித்தன.
இதையும் படிங்க: பாகிஸ்தான் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை: பயங்கரவாத கண்காணிப்பு ஆணையம்
இதனால் பாகிஸ்தான் அடர் சாம்பல் (Dark Grey) பட்டியலுக்குத் தள்ளப்படலாம் எனத் தெரிகிறது. பொதுவாக அடர் சாம்பல் என்பது மிக மிக கடுமையான எச்சரிக்கை விடுக்க பயன்படுத்தப்படும் பட்டியல் குறியீடாகும்.
மேலும் இது கடைசி வாய்ப்பாகும். கடந்த காலங்களில் பாகிஸ்தான் சாம்பல் நிறப் பட்டியலில் இருந்தது. தற்போது அடர் சாம்பல் பட்டியலுக்கு தள்ளப்பட்டலாம் எனத் தெரிகிறது. இது குறித்த முடிவை வருகிற 18ஆம் தேதி சர்வதேச நாடுகள் எடுக்கவுள்ளன.
இந்த நடவடிக்கை பாகிஸ்தான் மீது எடுக்கப்படும் பட்சத்தில் அந்நாடு, சர்வதேச நிதியம், உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றிலிருந்து கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாகிஸ்தான் ராஜ தந்திரம் பலிக்குமா? கத்தை கத்தையாக சிக்கும் கள்ள நோட்டுகள்!