ETV Bharat / international

கர்தார்பூர் வழித்தட திறப்புவிழா: மன்மோகன் சிங்குக்கு பாக். அழைப்பு - ன்மோகன் சிங்குக்கு பாகிஸ்தான் அரசு அழைப்பு

இஸ்லாமாபாத்: கர்தார்பூர் வழித்தட திறப்புவிழாவில் கலந்துகொள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Manmohan singh
author img

By

Published : Sep 30, 2019, 8:20 PM IST

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் பாகிஸ்தானில் வசித்துவந்ததன் நினைவாக, சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள ராவி நதிக்கரையில் கர்தார்பூர் சாஹிப் என்ற குருத்துவாரா அமைக்கப்பட்டுள்ளது. இந்த குருத்வாராவுக்கு சீக்கியர்கள் வருடந்தோறும் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இங்கு சீக்கியர்கள் எளிதாக சென்றுவர பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நானக் நகரிலிருந்து, இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் சிறப்பு வழித்தடம் அமைத்திட மத்திய அரசு முடிவுசெய்தது. இதற்கு பாகிஸ்தான் அரசும் ஒப்புதம் அளிக்கவே, வழித்தட பணிகள் தொடங்கி சமீபத்தில் முடிவுற்றன.

இதைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 9ஆம் தேதி கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், அன்று நடைபெறவுள்ள திறப்பு விழாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தான் அரசு சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறுகையில், "கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவுக்கு வருகை தருமாறு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுக்கிறோம்" என்றார்.

Intro:Body:

Pak FM Invites Manmohan to kartarpur Corridor

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.