ஆடம்பர வாகனங்கள், பரிசுப்பொருள்களைப் பெற்றதில் முறைகேடு உள்ளதாக பதிவுசெய்யப்பட்ட புகாரில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தானில் பிரதமராக மூன்று முறை பதவி வகித்த நவாஸ் ஷெரீஃபுக்கு எதிராகப் பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்க ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
70 வயதான அவர் உடல்நலக் கோளாறு காரணமாக அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று லண்டனில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இந்நிலையில், நீண்ட காலமாக வழக்கு விசாரணைக்கு வராத நவாஸ் ஷெரீஃபுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் பிணையுடன் கூடிய கைது ஆணை (bailable arrest warrant) பிறப்பித்துள்ளது.
மேலும் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானி ஆகியோரும் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்புடன் உறவு துண்டிப்பு - ட்ரம்ப் அறிவிப்பு