ETV Bharat / international

பொருளாதார நெருக்கடி எதிரொலி: பாகிஸ்தானில் மூடப்படும் வணிக நிறுவனங்கள்?

author img

By

Published : Oct 4, 2019, 9:08 AM IST

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவில்லையென்றால் வணிக நிறுவனங்களை மூடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று பன்னாட்டு நிறுவன முதலாளிகள் அந்நாட்டின் ராணுவ தளபதி காமர் ஜாவத் பஜ்வாவிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ராணுவ தளபதி காமர் ஜாவத் பஜ்வா

பாகிஸ்தானில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி குறித்து அந்நாட்டு பன்னாட்டு வணிக நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 20 முதலாளிகள் அந்நாட்டின் ராணுவ தளபதி காமர் ஜாவத் பஜ்வாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், தற்போது பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரதமர் இம்ரான் கான் வெறும் வாய்மொழி வாக்குறுதிகளைத் தவிர அதற்கு மேல் வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதற்கு மேலும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கமுடியாமல், வணிக நிறுவனங்களை இழுத்து மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த காமர் ஜாவத் பஜ்வா, "முடிந்தவரை இந்தப் பிரச்னையை தீர்க்க இதற்கென்று தனித்துவமான ஒரு குழு அமைக்கப்பட்டு அதில் ராணுவ அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இந்தப் புகார்கள் விசாரிக்கப்படும். அதுவரை அரசிற்கு எதிராக வணிக நிறுவனங்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க: ராணுவ எழுச்சி காணும் சீனா - யாரை எச்சரிக்கிறது?: ஓர் அலசல்!

Intro:Body:

dfvsdfc

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.