ETV Bharat / international

ஆங் சான் சூகியின் மீதான வழக்கு விசாரணை இன்று தொடக்கம்

author img

By

Published : Jun 14, 2021, 6:29 PM IST

மியான்மர் : தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ஆங் சான் சூகியின் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று தொடங்கியது.

ஆங் சான் சூகியின் மீதான வழக்கு விசாரணை இன்று தொடக்கம்
ஆங் சான் சூகியின் மீதான வழக்கு விசாரணை இன்று தொடக்கம்

நயபியிடவ்(மியான்மர்): மியான்மரில் ராணுவ ஆட்சி நிலைநிறுத்தப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பின்பு, மியான்மர் முன்னாள் பிரதமர் ஆங் சான் சூகியின் வழக்கு விசாரணை இன்று தொடங்கியது. சட்டவிரோதமாக தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்து வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை ஆங் சான் சூகி மீது போடப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் அனைத்தும் ஆங் சான் சூகி மீதுள்ள நற்பெயரை கலங்கப்படுத்துவதற்காக புனையப்பட்டவை என்று அவரது வழக்கறிஞர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சூகியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்

ராணுவ ஆட்சிக்குழு கடந்தவாரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி, அவரது அரசாங்கத்தின் முன்னாள் அலுவலர்கள் மீது புதிய ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து அந்நாட்டு மக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், வேலை நிறுத்தங்களை நடத்திவருகின்றனர். மேலும், பல்வேறு கொலைகள், வெடிகுண்டுத் தாக்குதல்களும் அந்நாட்டில் அண்மையில் அரங்கேறியுள்ளன. ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடியவர்களில் 840 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக அரசியல் சிறைவாசிகள் உதவிகள் மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் ஆணையம்

மியான்மரில் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் தொடர் தாக்குதல்கள், உயரிழப்புகளை சர்வதேச சமூகம் தடுக்க வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணைய தலைவர் மைக்கேல் பேச்லெட் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

மேலும், கடந்த மூன்று வாரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: 'ஜனநாயகத்தை நிலைநிறுத்துங்கள்'- மியான்மர் ராணுவத்திற்கு இந்தியா அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.