ETV Bharat / international

அடுத்த ஆபத்து ஹன்டா வைரஸ்? - China latest news

பெய்ஜிங்: சீனாவில் உயிரிழந்த ஒருவருக்கு ஹன்டா வைரஸ் (Hanta Virus) தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இணையத்தில் அது பெரும் புயலை ஏற்படுத்திவருகிறது.

hantavirus
hantavirus
author img

By

Published : Mar 24, 2020, 5:08 PM IST

Updated : Mar 24, 2020, 7:48 PM IST

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவத்தொடங்கியது. உலகெங்கும் 3,84,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16,591 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக சீனாவில் இந்த வைரஸ் தொற்றால் 3,277 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுதான் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் சீனாவில் படிப்படியாகக் குறைந்துவருகிறது, கடந்த சில நாள்களாகவே இந்த வைரசால் சீனாவில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இதனால் சீனா இப்போதுதான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. இந்நிலையில், சீனாவிற்கு அடுத்த தலைவலியை ஏற்படுத்தும் விதமாக ஹன்டா வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு சீனாவிலுள்ள ஷாண்டோங் மாகாணத்தில் வேலைக்குச் சென்ற ஒருவர் திடீரென்று உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு ஹன்டா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் பயணித்த 32 பேருக்கும் வைரஸ் தொற்று தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஹன்டா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இச்செய்தி இணையத்தில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.

  • A person from Yunnan Province died while on his way back to Shandong Province for work on a chartered bus on Monday. He was tested positive for #hantavirus. Other 32 people on bus were tested. pic.twitter.com/SXzBpWmHvW

    — Global Times (@globaltimesnews) March 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த ஹன்டா வைரஸ் எலியின் எச்சில், சிறுநீர், மலம் ஆகியவற்றின் மூலம் மனிதர்களுக்குப் பரவக் கூடியதாகும். ஹன்டா வைரஸ் தொற்று ஏற்படும் ஒருவருக்கு புளூ காய்ச்சல் ஏற்படும். தொடக்கத்தில் காய்ச்சல், குளிர், தலைவலி, தசை வலி, வாந்தி ஆகியவை இதன் அறிகுறிகளாக இருக்கும்.

இருப்பினும் ஹன்டா வைரஸ் என்பது புதிய வைரஸ் இல்லை என்றும், இவை எலிகளில் இருந்துதான் மனிதர்களுக்கு பரவுமே தவிர மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது என்று நிபுணர்கள் விளக்கிவருகின்றனர்.

இதையும் படிங்க: மூன்று வாரங்கள் முடங்கும் இங்கிலாந்து - போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

Last Updated : Mar 24, 2020, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.