அண்டை மாநிலமான நேபாளத்தில் அரசியல் சூழ்நிலைகள் மிகவும் மோசமாக உள்ளது. நேபாள பிரதமர் கே.பி ஷர்மா ஒலி, இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டு மசோதா நிறைவேற்றியது மட்டுமின்றி , இந்தியா தனது ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுமட்டுமின்றி கட்சியின் உள்ளே பிளவு ஏற்படவும் தொடங்கியுள்ளது. இவருக்கு எதிராக முன்னாள் பிரதமரான புஷ்ப கமல் தஹல் 'பிரச்சந்தா உட்பட பல உறுப்பினர்கள் போர்க்கோடி தூக்கியுள்ளன.இப்பிரச்னைக்கு தீர்வு காண கட்சியின் செயல் தலைவர் பிரசந்தாவுடன் பிரதமர் ஒலி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.ஐந்துக்கும் மேற்பட்ட முறை ஒரு வாரத்தில் மட்டும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காத்மாண்டில் மீண்டும் பிரதமர் ஒலியும், பிரசந்தாவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தொடர் சந்திப்பில் தான் பிரதமர் ஒலியின் அரசியல் பயணம் நீடிக்குமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும், கடவுள் ராமர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என்றும், உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது என்ற நேபாள பிரதமரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.