நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள சாஹித் கங்காலால் தேசிய இதய மையத்தில் அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒளி நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பியுள்ளதாக பிரதமரின் ஊடக ஆலோசகர் செய்தி வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, அவர் பதவி விலக வேண்டும் என ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் போர்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து அங்கு அரசியல் குழப்பம் நீடித்துவந்தது. தன்னை பிரதமர் பதவியிலிருந்து நீக்க இந்தியா சூழ்ச்சி செய்துவருவதாக ஒளி தெரிவித்திருந்தார். இந்தியாவுக்கு எதிரான கருத்தை ஒன்று நிரூபிக்க வேண்டும் அல்லது அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமர் பிரச்சண்டா கருத்து வெளியிட்டார்.
இதுகுறித்து பிரச்சண்டா கூறுகையில், "ஒளியின் கருத்து அரசியல் ரீதியாகவும் ராஜாங்க ரீதியாகவும் சரியானது அல்ல. இது அண்டை நாட்டின் உறவில் பாதிப்பு ஏற்படுத்தும்" என்றார்.
இதையும் படிங்க: பங்குச் சந்தை தாக்குதலுக்கும் எங்களுக்கு தொடர்பில்லை - பலுச் விடுதலைப் படை