நியூசிலாந்தில் புகழ்பெற்ற சுற்றாலத் தலமான ஒயிட் தீவில் உள்ள எரிமலையில் திங்களன்று திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதனால் தீவை சுற்றுபார்க்க சென்றிருந்த 40 சுற்றுலாப் பயணிகள் சிக்கிக்கொண்டனர்.
எரிமலை வெடிப்பில் சிக்கியும், சிகிச்சைப் பலனின்றியும் 16 பேர் உயிரிழந்த நிலையில், மீட்டக்கப்பட்ட நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, விபத்தில் சிக்கி மாயாமான 8 சுற்றுலாப் பயணிகளைத் தேடும் பணி விரைவில் தொடக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜெசின்டா ஆர்டன் உறுதியளித்தார்.
இதுகுறித்து அஸோசியேட் பிரெஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்த அவர், " மாயமானவர்களைத் தேடும்பணி விரைவில் தொடங்கப்படும். இவர்களை மீட்டுக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க : இஸ்ரேலில் மீண்டும்...மீண்டும்...மீண்டும் தேர்தல்!