ETV Bharat / international

5 மாதங்களுக்குப் பின் கரோனா இல்லாத ஒரு நாள்... சாதித்த ஆஸ்திரேலியா!

மெல்போர்ன்: ஐந்து மாதங்களுக்கு பின், ஆஸ்திரேலியாவில் ஒரு நாளில் ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை.

No new Covid-19 cases in Aus
No new Covid-19 cases in Aus
author img

By

Published : Nov 1, 2020, 7:35 PM IST

சர்வதேச அளவில் கரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்துவருகிறது. அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற நாடுகளில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை. அதாவது வியாழக்கிழமை (நவ.29) ஆம் தேதி 8 மணி முதல் வெள்ளிக்கிழமை (நவ.30) ஆம் தேதி இரவு 8 மணி வரை ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை.

குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் கரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணமான விக்டோரியாவில் இரண்டாவது நாளாக யாருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை.

முன்னதாக, விக்டோரியா தலைநகர் மெல்போர்னில் கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக மீண்டும் இரண்டாவது முறையாக கடந்த ஜூலை 7ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு சுமார் 110 நாள்களாக அமலில் உள்ள நிலையில் தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 27 ஆயிரத்து 500 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 905 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா காரணமாக உயிரிழந்தவர்களில் சுமார் 90 விழுக்காடு விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

இதையும் படிங்க: 10 லட்சத்தை தாண்டிய கரோனா பரவல்: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.