அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது அரசின் வெளியுறவுக் கொள்கை முடிவு குறித்து பேசிய கருத்துக்கு வட கொரியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் அணுக் கொள்கை குறித்து ஜோ பைடன் விமர்சிக்கும்விதமாக கருத்து தெரிவித்தார்.
அதற்குப் பதிலடி தரும்விதமாக வட கொரியா சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. அதில், "அமெரிக்க அதிபர் தனது பொறுப்பற்ற உரைமூலம் கடும் தவறைச் செய்துள்ளார். அமெரிக்காவுக்குத் தக்க பதிலடி கொடுக்க வட கொரியா தயாராகவுள்ளது. இது அவர்களுக்கு மிக மோசமான விளைவுகளை அளிக்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல்போக்கு நிலவிவருகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதில் எதிர்பாராத மாற்றம் கொண்டுவரும்விதமாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நட்புறவு பாராட்டி அந்நாட்டிற்கே திடீர் பயணம் மேற்கொண்டார்.
தற்போது ஜோ பைடன் அமெரிக்க அதிபராக வந்துள்ள நிலையில் மீண்டும் மோதல் போக்கு தொடங்கியுள்ளது.