ETV Bharat / international

குழந்தைக்கு பால் புகட்டும் நியூசிலாந்து சபாநாயகர்! - பால் புகட்டினார் ட்ரெவர் மல்லார்ட்

நியூலிசாந்தில் பிரதிநிதிகள் வாதம் நடந்து கொண்டிருந்தபோது எம்பி ஒருவரின் குழந்தை அழுததை பார்த்த சபாநாயகர் ட்ரெவர் மல்லார்ட், அந்த குழந்தையை சமாதானப்படுத்தி பால் புகட்டினார். அக்காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trevor Mallard
author img

By

Published : Aug 22, 2019, 5:12 PM IST

நியூசிலாந்து நாடாளுமன்றம் நேற்று கூடியபோது, பிரதிநிதிகளின் வாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எம்பி தமதி காஃபியின் குழந்தை அழுகத் தொடங்கியது. அந்தக் குழந்தை வாடகைத்தாயின் மூலம் பிறந்தது. பின்னர் குழந்தை அழுவதைப் பார்த்த சபாநாயகர் ட்ரெவர் மல்லார்ட், குழந்தையை சமாதானப்படுத்தி புட்டி பால் கொடுத்தார்.

பின்னர், குழந்தையை கையில் வைத்துக் கொண்டே அவையை நடத்தினார். குழந்தை அவ்வப்போது சிணுங்கும்போதேல்லாம் பால் புகட்டி சமாதானப்படுத்தினார். ட்ரெவர் குழந்கைள் மீது அலாதிய பிரியம் கொண்டவர் என்று அவையில் இருப்பவர்கள் கூறினர்.

நியூசிலாந்து சபாநாயகர்
நியூசிலாந்து சபாநாயகர்

இது குறித்து ட்ரெவர் மல்லார்ட் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "சாதாரணமாக சபாநாயகர் இருக்கையை தலைமை அலுவலர்கள் உபயோகப்படுத்துவார்கள். ஆனால் இம்முறை என்னுடன் ஒரு முக்கியமான நபர் அமர்ந்துள்ளார் என்றும், தமதி காஃபி - டிம் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள். உங்களது குடும்பத்திற்கு ஒருவர் புதிதாக வருகை தந்துள்ளார்" என்று குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார்.

தற்போது ட்ரெவர் மல்லார்ட் குழந்தைக்கு பால் புகட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.