நியூசிலாந்து நாட்டில் நேற்று(அக்.17) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், தற்போதைய பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி 49 விழுக்காடு வாங்குகள் பெற்று பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் தேசிய கட்சி 27 விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளது.
நியூசிலாந்து வரலாற்றில் தொழிலாளர் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்பு வரை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடனேயே தொழிலாளர் ஆட்சி அமைத்த நிலையில், இம்முறை பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைத்துள்ளதால் கூட்டணி கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆக்லாந்தில் தனது வீட்டின் முன் உரையாற்றிய ஜெசிந்தா ஆர்டன், "கரோனா பரவலை தடுக்கவும் பொருளாதாரத்தை மீட்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மக்கள் எங்கள் நடவடிக்கைகளை அங்கீகரித்துள்ளனர் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன" என்றார்.
அமெரிக்கத் தேர்தல் குறித்துப் பேசிய அவர், "உலகளவில் மக்கள் பிரிவினை அரசியலுக்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். அது ஜனநாயகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார். அடுத்த முன்று வாரங்களுக்குள் புதிய அரசு பதவியேற்கும் என்றும் ஜெயிந்தா ஆர்டன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாட்டை விட்டு வெளியேறுவேன் - ட்ரம்பின் திடீர் முடிவின் காரணம்?