ETV Bharat / international

அமெரிக்கா, இங்கிலாந்து வரிசையில் சீனாவுக்கு செக் வைத்த நியூசிலாந்து!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இதேபோன்ற நடவடிக்கைகளை அறிவித்ததுள்ள நிலையில், உளவுத்துறை பகிர்வு கூட்டணியில் உறுப்பினராக உள்ள நியூசிலாந்தும் இம்முடிவை எடுத்துள்ளது.

extradition treaty New Zealand suspends extradition treaty Hong Kong Five Eyes Five Eyes intelligence-sharing alliance நாடு கடத்தல் நியூசிலாந்து சட்டம் ஹாங்காங் சீனா, நியூசிலாந்து மோதல்

author img

By

Published : Jul 28, 2020, 10:48 PM IST

வெலிங்டன்: நியூசிலாந்து செவ்வாயன்று (ஜூலை28) ஹாங்காங்குடனான நாடு கடத்தல் ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரை தன்னாட்சி பிரதேசத்திற்கான சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா நிறைவேற்றியதன் பிரதிபலிப்பாக இந்த நடவடிக்கையை நியூசிலாந்து எடுத்துள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் முன்னர் இதேபோன்ற நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. இந்த வரிசையில் தற்போது நியூசிலாந்தும் இணைந்துள்ளது.

நியூசிலாந்து அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனாவை நம்பியுள்ளது, இதனால் கடந்த காலங்களில் சீனாவுடன் நேரடி அரசியல் மோதலைத் தவிர்க்க பெரும்பாலும் முயன்றது. சீனா ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள நியூசிலாந்தின் பால்பவுடர் உள்ளிட்ட விவசாயப் பொருள்களை வாங்குகிறது.

இதற்கிடையில், நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், புதிய சட்டம் சீனா சர்வதேச சமூகத்திற்கு செய்த கடமைகளுக்கு எதிரானது என்றார். மேலும், "ஹாங்காங்கின் குற்றவியல் நீதி அமைப்பு சீனாவிற்கு எதிராக உள்ளது என்பதை நியூசிலாந்தினால் இனி நம்ப முடியாது," என்றும் அவர் கூறினார்.
இரு நாட்டு உறவில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும்" என்று கூறிய பீட்டர்ஸ் ஹாங்காங்கிற்கான இராணுவ மற்றும் தொழில்நுட்ப ஏற்றுமதியை சீனாவுக்கான ஏற்றுமதியைப் போலவே நடத்தும்" என்றும் கூறினார்.

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், “நியூசிலாந்து அதன் கொள்கைகளைப் பின்பற்றுகிறது. நாங்கள் சீனாவுடன் ஒரு சிறந்த உறவைக் கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இது குறித்து சீன தூதரக அலுவலர்கள் கூறுகையில், “பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சீன அரசு அதிகாரத்தைக் குறைக்க ஒரு தளமாக ஹாங்காங்கைத் தடுப்பதற்கும் புதிய பாதுகாப்புச் சட்டம் தேவை.

இந்நிலையில், நியூசிலாந்து அரசாங்கத்தின் முடிவு சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளை கடுமையாக மீறுவதாகும். இது சீனாவின் உள் விவகாரங்களில் முற்றிலும் தலையிடுவதாகும்” என்றனர்.

எனினும் இதனை பீட்டர்ஸ் மறுத்துள்ளார். இது குறித்து அவர், “நியூசிலாந்து சுதந்திரமாக தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஏற்றுமதியில் எந்த தாக்கத்தையும் பற்றி கவலைப்படவில்லை. எங்கள் கருத்துக்களை கூற எங்களுக்கு நிச்சயமாக உரிமை உண்டு. நியூசிலாந்து இந்தச் சட்டம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டதால் ஹாங்காங்கின் நிலைமையை நியூசிலாந்து கண்காணிக்கும்” என்றும் கூறினார்.

ஹாங்காங்குடனான நாடு கடத்தல் ஒப்படைப்பு ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும்பட்சத்தில், ஹாங்காங்வாசிகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட மேலே குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்லலாம். அவர்கள் மீது சீனா கிரிமினல் குற்றஞ்சாட்டினாலும், சம்மந்தப்பட்ட நாடுகள் அவர்களை ஒப்படைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காஷ்மீரில் நிலங்களை ராணுவம் கையகப்படுத்த இனி அனுமதி கோர வேண்டியதில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.