ETV Bharat / international

நேபாள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவிக்கு ஆபத்து - நேபாள தலைமை நீதிபதியின் பதவிக்கு ஆபத்து

பெரும் ஊழல் புகார்களில் சிக்கியுள்ள நேபாள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றம் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

Nepal's Chief Justice Rana
Nepal's Chief Justice Rana
author img

By

Published : Feb 14, 2022, 3:36 PM IST

நேபாள நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளவர் சோலேந்திரா ஜேபி ரானா. இவர் மீது அந்நாட்டு நாடாளுமன்றம் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரவுள்ளது.

இதை அந்நாட்டு நாடாளுமன்ற செயலரின் செய்தித்தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நேபாள உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சோலேந்திர ரானா பதவியேற்றார்.

இவர் மீது பெரும் ஊழல் புகார்கள் தொடர்ச்சியாக எழுந்துள்ளது. நேபாள பார் கவுன்சில் இவருக்கு எதிராக புகார் அளித்து கடந்த மூன்று மாதங்களாக போராட்டம் நடத்திவருகிறது. பார் கவுன்சிலின் இந்த தொடர் அழுத்தத்தை அடுத்து நேபாள நாடாளுமன்றம் இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த பதவி நீக்க தீர்மானத்திற்கு மூன்றில் இரு பங்கு ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து சோலேந்திரா நீக்கப்படுவார். இந்நிலையில், அந்நாட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தீப் குமார் கர்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஹிஜாப் அணியவில்லை என்றால் பாலியல் தொல்லை ஏற்படும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.