இந்தியா கடந்த வாரம் தனது யூனியன் பிரதேசங்கள் குறித்த வரைப்படத்தை வெளியிட்டது. ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் உள்ளிட்ட பகுதிகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீர் பகுதிகள் காஷ்மீரோடும், பலுசிஸ்தானத்தின் கில்கிட் பகுதிகள் லடாக் பகுதியோடும் இணைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி கலாபனி பகுதியும் இந்தியாவோடு இணைக்கப்பட்ட பகுதி என்று செய்திகள் வெளியாகின.
இது நேபாளத்தில் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தப் புதிய வரைபடம் தொடர்பாக இந்தியா தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் நேபாள தலைவர்கள் அந்நாட்டின் பிரதமர் ஒலியை சந்தித்துப் பேசினர். அப்போது இந்தியாவுடனான கலாபனி எல்லை விவகாரத்தில் போராட்டம் நடக்க வாய்ப்புள்ளது.
எனவே அரசு இந்தியாவுடன் ராஜாந்திர ரிதீயாக பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதுதொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது.
நேபாள முன்னாள் அதிபரான கமல் தாபா (Kamal Thapa ), கலாபனி எல்லையிலுள்ள இந்திய ராணுவ முகாமை அகற்ற வேண்டும் என்று பிரதமர் ஒலியிடம் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘இந்திய - நேபாள உறவில் உருவாகியுள்ள புதிய சிக்கல்!’ - ஸ்மிதா சர்மா