இந்தியா - நேபாளம் எல்லை பகுதியில் உள்ள லிபுலேக் பகுதி குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பூசல் நிலவிவருகிறது. லிபுலேக் பகுதியில் புதிய சாலை வழித்தடத்தை இந்தியா தொடங்கிவைத்தது. இந்த சாலை திறப்பு விவகாரம் தான் இரு நாட்டுக்கும் இடையே புது எல்லைப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கை தொடர்பாக அதிருப்பதி அடைந்துள்ள நேபாளம், அந்நாட்டு எல்லையை இந்தியா தனது பகுதியாக சித்தரிக்கிறது என குற்றஞ்சாட்டியது. மேலும், மேற்கண்ட பகுதியை நேபாளுடன் சேர்ந்த பகுதி என்பதை குறிக்கும் விதமாக வரைபடம் வெளியிடப் போவதாக நேபாளம் தெரிவித்தது. இந்த புதிய வரைபடம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற வேண்டிய நிலையில், இந்த கூட்டத்தை தற்போது நேபாளம் ஒத்திவைத்துள்ளது. இந்தியாவுடனான மோதல் போக்கைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை நிறுவியவர் நேரு - ராகுல் காந்தி புகழாரம்